Avadi - IT Corridor

Avadi - IT Corridor

Home > News > Future IT Corridor

Thanthi TV

ஆவடியில் கால்பதிக்க உலக நிறுவனங்கள் விருப்பம் காட்டியிருக்கிறார்கள் - மாஃபா பாண்டியராஜன்

Jun 18, 2019 / Thanthi TV (Youtube)

ஆவடி மாநகராட்சி உதயமானதை தொடர்ந்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அளித்த பேட்டியில்...

“சில திட்டங்கள் தடை பட்டதிற்கு ஒரு சில காரணங்கள் இருக்கு, உதாரணமாக அண்ணனுர் மேம்பாலம் ஒரு கோவில் வழியாக அந்த பாலம் திட்டமிடப் பட்டிருந்தது அதனால் அந்த திட்டம் தடை பட்டது, தற்போது அது மாற்று வழியில் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை திருவள்ளூர் சாலை விரிவாக்க பணிகளுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் நிதி ஒதுக்கியுள்ளார்கள், அதற்குண்டான வேலைகள் தொடங்க இருக்கிறது. பாடியிலிருந்து திருநின்றவூர் வரையிலும் 5 மேம்பாலங்கள் திட்டமிடப் பட்டிருக்கிறது. 30000 பேர் வேலை வாய்ப்பை பெரும் Tidel Park பட்டாபிராமில் அமையப்பெறும் பொழுது அந்தப் பகுதியே ஒரு IT Corridor ஆக மாறிவிடும்.

ஏற்கனவே TCS போன்ற நிறுவனங்கள் வருவதற்கு விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் DELL நிறுவனம் அவர்களுடைய அலுவலகத்தை கொண்டு வரும் திட்டத்தை முன் வைத்து இருக்கிறார்கள். இது போன்ற உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் ஆவடியில் கால் பாதிக்க விருப்பம் கொண்டுள்ளனர்.”